1. பொழுதுபோக்கு
  2. சினிமா
  3. சினிமா செய்தி
Written By
Last Modified: செவ்வாய், 16 பிப்ரவரி 2021 (15:59 IST)

நடிகராகும் ஜி பி முத்து… அறிவிப்பை வெளியிட்டு மகிழ்ச்சி!

டிக்டாக் பிரபலம் ஜி பி முத்து புதிதாக ஒரு திரைப்படத்தில் நடிக்க உள்ளதாக தெரிவித்துள்ளார்.

டிக்டாக்கில் மிகவும் பிரபலமாக இருந்தவர்களில் ஜி பி முத்துவும் ஒருவர். டிக்டாக் தடை செய்யப்பட்டதற்குப் பிறகு இன்ஸ்டாகிராம் போன்ற சமூகவலைதளங்களில் வீடியோக்களை வெளியிட்டு வந்தார். இந்நிலையில் இப்போது குடும்ப சூழல் தற்கொலை முயற்சி மேற்கொண்டுள்ளார். இது அவரது பாலோயர்ஸ்களின் மத்தியில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. அதன் பின்னர் அவர் சிகிச்சையில் தேறி வந்தார். இந்நிலையில் இப்போது அவர் தான் சினிமாவில் நடிக்க உள்ளதாக அறிவித்துள்ளார்.

சமூகவலைதளப் பக்கத்தில் தனது புகைப்படத்தை வெளியிட்டுள்ள அவர் நாளை படப்பிடிப்பு எனக் கூறியுள்ளார்.