1. பொழுதுபோக்கு
  2. சினிமா
  3. சினிமா செய்தி
  4. Why Senior Actors and Directors Struggle to Impress Today's Youth

மணிரத்னம், கமல்ஹாசன் 2 பேருமே சீனியர்கள்.. இளைய தலைமுறை ரசிகர்களை ஈர்க்குமா ‘தக்லைஃப்’?

maniratnam
இன்றைய இளைய தலைமுறை ரசிகர்களை திருப்திப்படுத்தும் வகையில், சீனியர் நடிகர்கள் மற்றும் இயக்குனர்களுக்கு படம் எடுக்க தெரியவில்லை என்றும், அதனால் தான் இந்தியன் 2, கேம்ஸ் சேஞ்சர் உள்ளிட்ட படங்கள் தோல்வி அடைந்ததாக கூறப்படுகிறது.
 
இளைய தலைமுறை இயக்குனர்கள் வித்தியாசமான கோணத்தில் படம் எடுத்து, இன்றைய இளைஞர்களை திருப்தி செய்யும் வகையில் படம் எடுக்கிறார்கள். அதனால் தான் லவ் டுடே, மகாராஜா,  டூரிஸ்ட் ஃபேமிலி உள்பட பல திரைப்படங்கள் வெற்றி பெற்று வருகின்றன.
 
தியேட்டருக்கு தற்போது வருபவர்கள் இளைய தலைமுறை மட்டுமே என்பதால், அவர்களுக்கு ஏற்ற படம் வந்தால் மட்டுமே வெற்றி அடைய முடியும்.  ரொமான்ஸ் மற்றும் டெக்னாலஜி சார்ந்த படங்களே இளைய தலைமுறையின் விருப்பங்களாக இருக்கின்றன.
 
ஆனால், மணிரத்னம் மற்றும் கமல்ஹாசன் ஆகிய இருவரும் சீனியர்கள் என்பதால், இன்றைய இளைய தலைமுறையினரை ஈர்க்கக்கூடிய வகையில் அதில் காட்சிகள் இருக்குமா? என்பதை பொறுத்திருந்துதான் பார்க்க வேண்டும்.
 
மணிரத்னம் இயக்கத்தில் உருவான பொன்னியின் செல்வன் திரைப்படம் கூட 40 வயதுக்கு மேல் உள்ளவர்களே அதிகம் பார்த்ததால் வெற்றி பெற்றது என்றும், கமல்ஹாசனின் விக்ரம் படம் வெற்றி பெற, இளைய தலைமுறை இயக்குனர் லோகேஷ் கனகராஜ் ஒரு முக்கிய காரணம் என்றும் சமூக வலைதளங்களில் கூறப்பட்டு வருகிறது.
 
இருப்பினும், இரண்டு சீனியர்களின் ‘தக்லைஃப்’ திரைப்படம் எதிர்பார்ப்பை அதிகரித்துள்ளதால், வெற்றி பெறும் என்று இன்னொரு தரப்பினர் கூறி வருகின்றனர்.
 
Edited by Siva
 
அடுத்த கட்டுரையில்
தமிழிலிருந்துதான் கன்னடம் பிறந்தது… தக் லைஃப் ப்ரமோஷனில் கமல் பேச்சு – கர்நாடகாவில் எழுந்த எதிர்ப்பு!