செவ்வாய், 24 டிசம்பர் 2024
  1. பொழுதுபோக்கு
  2. சினிமா
  3. சினிமா செய்தி
Written By
Last Modified: செவ்வாய், 9 பிப்ரவரி 2021 (16:37 IST)

எந்த பெண்ணை தொட்டாலும் அவருக்கு ஒரு வீடு… எம் ஆர் ராதாவைப் பற்றி சொன்ன பிரபலம்!

தமிழ் சினிமாவின் மூத்த நடிகர்களில் ஒருவரான எம் ஆர் ராதாவைப் பற்றி பிரபலம் ஒருவர் பேசியுள்ளது அதிர்ச்சியைக் கிளப்பியுள்ளது.

தமிழ் சினிமாவில் நடிப்புக்கு இலக்கணம் வகுத்த நடிகரான சிவாஜி கணேசனே குருவாக ஏற்றுக்கொண்ட நடிகர் என்றால் அது எம் ஆர் ராதாதான். அந்த அளவுக்கு தனது நடிப்பு மற்றும் உடல்மொழியால் சிறப்பான நடிப்பை வெளிப்படுத்துபவர். இப்போது கூட அவரின் ரத்தக்கண்ணீர் திரைப்படம் இளைஞர்கள் மத்தியில் பிரபலமாகப் பேசப்பட்டு வருகிறது.

இவருக்கு பல மனைவிகள் உண்டு என்பது அனைவரும் அறிந்ததே. அதில் சிலர் சினிமா துறையில் நடிகர்களாக பிரகாசிக்கின்றனர். இந்நிலையில் பழங்கால சினிமாவின் தயாரிப்பு நிர்வாகியான வீரையா என்பவர் எம் ஆர் ராதாவோடு நெருங்கி பழகியவர். அவர் சமீபத்தில் அளித்த நேர்காணலில் ‘எம் ஆர் ராதா ஒரு பெண்ணை தொட்டு விட்டார் என்றால் அவருக்குக் கண்டிப்பாக ஒரு வீடு உண்டு’ எனக் கூறியுள்ளார்.