விஜயகாந்த் வீட்டின் முன் நின்று வீடியோ எடுத்துப் போட்ட டிக்டாக் பிரபலம்!

Last Modified வியாழன், 18 பிப்ரவரி 2021 (08:09 IST)

விஜயகாந்த் வீட்டின் முன்னர் நின்று டிக்டாக் பிரபலம் ஜி பி முத்து வீடியோ எடுத்து போட்டுள்ளார்.

டிக்டாக்கில் மிகவும் பிரபலமாக இருந்தவர்களில் ஜி பி முத்துவும் ஒருவர். டிக்டாக் தடை செய்யப்பட்டதற்குப் பிறகு இன்ஸ்டாகிராம் போன்ற சமூகவலைதளங்களில் வீடியோக்களை வெளியிட்டு வந்தார். இந்நிலையில் இப்போது குடும்ப சூழல் தற்கொலை முயற்சி மேற்கொண்டுள்ளார். இது அவரது பாலோயர்ஸ்களின் மத்தியில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. அதன் பின்னர் அவர் சிகிச்சையில் தேறி வந்தார். இந்நிலையில் இப்போது அவர் தான் சினிமாவில் நடிக்க உள்ளதாக அறிவித்துள்ளார்.

இதையடுத்து அவர் சமீபத்தில் வெளியிட்ட வீடியோவில் விஜயகாந்தின் சாலிகிராமம் வீட்டின் முன்னர் நின்று வீடியோ எடுத்து பதிவிட்டுள்ளார். அந்த வீடியோவில் ‘நண்பர்களே நான் விஜயகாந்த் வீட்டின் முன் இருக்கிறேன். ரொம்ப நாளா அவரைப் பாக்கணும்னு ஆசை… ஆனா அவரை பாரக்க முடியவில்லை. வீட்டைப் பார்த்துவிட்டேன்’ எனக் கூறியுள்ளார்.
இதில் மேலும் படிக்கவும் :