எஸ்.எஸ்.ராஜமெளலியின் ‘ஆர்.ஆர்.ஆர்’: நாளை முதல் படப்பிடிப்பில் ஆலியா பட்!
பிரமாண்ட இயக்குநர் எஸ்எஸ் ராஜமெளலி இயக்கி வரும் திரைப்படம் ‘ஆர்.ஆர்.ஆர்’. இந்த படத்தின் படப்பிடிப்பு கிட்டத்தட்ட நிறைவடையும் பகுதிக்கு வந்து விட்டது என்பதும் விரைவில் இந்த படத்தின் படப்பிடிப்பு முடிவடையும் என்றும் கூறப்படுகிறது
மேலும் இந்த படம் அடுத்த ஆண்டு தான் ரிலீஸ் செய்யப்படுகிறது என்பதும் அதற்குள் போஸ்ட் புரொடக்ஷன் பணிகளை முடிக்க படக்குழுவினர் தீவிரமாக உள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது. இந்த நிலையில் நாளை முதல் அடுத்த கட்ட படப்பிடிப்பு தொடங்க உள்ளதாகவும் இந்த படப்பிடிப்பில் பிரபல பாலிவுட் நடிகை ஆலியா பட் கலந்துகொள்ள இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளதாகவும் தகவல்கள் வெளிவந்துள்ளன
இந்த படத்தில் ராம்சரண் தேஜாவுக்கு ஜோடியாக ஆலியா பட் நடிக்கிறார் என்பது குறிப்பிடத்தக்கது தென்னிந்திய மற்றும் வட இந்திய பிரபலங்கள் இணைந்து நடித்துள்ள ‘ஆர்.ஆர்.ஆர்’ திரைப்படம் சுமார் 400 கோடி பட்ஜெட்டில் தயாராகி வருகிறது என்பதும் இந்த படம் பாகுபலி, பாகுபலி 2 படங்களை போல் மிகப்பெரிய எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது