1. பொழுதுபோக்கு
  2. சினிமா
  3. சினிமா செய்தி
Written By siva
Last Modified: ஞாயிறு, 11 அக்டோபர் 2020 (16:45 IST)

’இரண்டாம் குத்து’ படத்திற்கு தடையா? அமைச்சரின் அறிவிப்பால் பரபரப்பு!

சமீபத்தில் இயக்குனர் சந்தோஷ்குமார் நடித்து இயக்கிய ’இரண்டாம் குத்து’ திரைப்படம் குறித்த பரபரப்பான தகவல்கள் வெளிவந்து கொண்டிருக்கின்றன. இந்த படத்திற்கு தனது கடும் எதிர்ப்பை பாரதிராஜா பதிவு செய்தார் என்பது குறிப்பிடத்தக்கது 
 
இந்த நிலையில் தமிழ் கலாச்சாரத்திற்கு எதிரான திரைப்படங்களை தடை செய்ய தமிழக அரசு ஆவன செய்யும் என்று அமைச்சர் ஜெயக்குமார் அவர்கள் தெரிவித்துள்ளார். இது குறித்த கேள்வி ஒன்றுக்கு பதிலளித்த அவர் சென்சார் போர்டு மத்திய அரசின் கட்டுப்பாட்டில் இருந்தாலும் தமிழ் கலாச்சாரத்தையும் பண்பாட்டையும் சீரழிக்கின்றன எந்த காட்சிகளை உடையதாக இருந்தாலும் அந்தக் காட்சிகளை தடை செய்ய தமிழக அரசு தேவையான நடவடிக்கைகளை ஆவன செய்யும் என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார் 
 
எனவே தமிழ் கலாச்சாரத்திற்கு எதிரான ஆபாச காட்சிகளை கொண்ட ’இரண்டாம் குத்து’திரைப்படத்திற்கு தடை விதிக்கப்படுமா என்பதை பொறுத்திருந்து பார்ப்போம்