வியாழன், 9 ஜனவரி 2025
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By Prasanth Karthick
Last Modified: வெள்ளி, 9 அக்டோபர் 2020 (17:20 IST)

பாவம் பொன்னார்.. விரக்தியில ஏதேதோ பேசுறார்! – கடம்பூர் ராஜூ

பாஜக கூட்டணி குறித்து பொன்.ராதாகிருஷ்ணன் கூறிய கருத்து சர்ச்சைக்குள்ளான நிலையில், அதுகுறித்து அமைச்சர் கடம்பூர் ராஜூ பேசியுள்ளது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

தமிழகத்தில் சட்டமன்ற தேர்தல் நடைபெறுவதற்கு இன்னும் சில மாதங்களே உள்ள நிலையில் அரசியல் கட்சிகளிடையே கூட்டணி குறித்த பரபரப்பு எழுந்துள்ளது. இந்நிலையில் சமீபத்தில் பேசிய பாஜக முன்னாள் எம்.பி பொன்.ராதாகிருஷ்ணன் “தேர்தல் நெருங்கும் சமயம் கூட்டணிகள் மாறும். பாஜக சட்டமன்ற தேர்தலில் திமுகவுடன் கூட கூட்டணி வைக்கலாம்” என பேசியிருந்தார்.

இதனால் பாஜக கூட்டணியை மாற்ற முயற்சிகளை மேற்கொண்டு வருகிறதா என்ற ரீதியிலான பேச்சுகளும் அரசியல் வட்டாரத்தில் எழுந்துள்ளன. இந்நிலையில் பொன்.ராதாகிருஷ்ணன் குறித்து பேசியுள்ள அமைச்சர் கடம்பூர் ராஜூ “கட்சியும், பொதுமக்களும் தன்னை ஒதுக்கி விட்டதால் பொன்.ராதாகிருஷ்ணன் விரக்தியில் ஏதோ பேசிக் கொண்டிருக்கிறார். பாஜக கூட்டணி குறித்து கட்சி தலைமை அல்லது தலைவர்தான் சொல்ல வேண்டும்” என கூறியுள்ளார்.