சென்னையில் வெளிநாட்டை உருவாக்கும் அருண் விஜய் படக்குழு!
பல வருடங்களாக போராடி வந்த அருண் விஜய்க்கு தடையற தாக்க மற்றும் தடம் போன்ற படங்கள் வெற்றிப் படங்களாக அமைந்து இப்போது முன்னணி நடிகராகியுள்ளார்.இதையடுத்து அவர் இப்போது இயக்குனர் ஏ எல் விஜய் இயக்கத்தில் ஒரு புதுப்படத்தில் நடித்து வருகிறார்.
இந்த படத்தின் ஷூட்டிங் இங்கிலாந்தில் நடந்த நிலையில் இப்போது படத்தின் தலைப்பு அறிவிக்கப்பட்டுள்ளது. அருண் விஜய், ஏமி ஜாக்சன் மற்றும் நிமிஷா சஜயன் நடிக்கும் இந்த படத்துக்கு அச்சம் என்பது இல்லையே என்று தலைப்பு வைக்கப்பட்டுள்ளது. படத்துக்கு ஜி வி பிரகாஷ் இசையமைக்கிறார்.
இந்த படத்தின் ஆக்ஷன் காட்சிகள் இப்போது படமாக்கப்பட்டு வரும் நிலையில், படப்பிடிப்பின் போது அருண் விஜய் முழங்கையில் காயமடைந்துள்ளார். இது சம்மந்தமான புகைப்படத்தை அவர் இணையத்தில் வெளியிட்டுள்ளார்.
சென்னையில் வெளிநாட்டு ஜெயில் போன்ற செட் ஒன்றை உருவாக்கி அதில்தான் ஆக்ஷன் காட்சிகளை இயக்குனர் ஏ எல் விஜய் படமாக்கி வருகிறாராம். இதற்காக பல வெளிநாட்டு நடிகர்களும், ஸ்டண்ட் கலைஞர்களும் சென்னைக்கு வரவழைக்கப்பட்டுள்ளனர்.