ஞாயிறு, 22 டிசம்பர் 2024
  1. பொழுதுபோக்கு
  2. சினிமா
  3. சினிமா செய்தி
Written By vinoth
Last Modified: திங்கள், 28 நவம்பர் 2022 (14:32 IST)

“நானாக சொல்லும்வரை அது உண்மையில்லை”… காதல் குறித்து ராஷ்மிகா பதில்!

நடிகை ராஷ்மிகா மந்தனா விஜய் தேவரகொண்டாவை காதலிப்பதாக அடிக்கடி வதந்திகள் வெளியாகி வருகின்றன.

நடிகை ராஷ்மிகா மந்தனா தற்போது விஜய் நடிக்கும் வாரிசு படத்தில் கதாநாயகியாக நடித்து வருகிறார். இது தவிர அவர் நடிப்பில் புஷ்பா 2 உள்ளிட்ட பல படங்களில் நடித்து வருகிறார். கன்னட சினிமாவில் தொடங்கிய அவரின் நடிப்பு இப்போது பாலிவுட் வரை நீண்டுள்ளது.

இப்போது இந்திய அளவில் பிரபலமான நடிகையாக ராஷ்மிகா இருந்தாலும், அவரின் சினிமா வாழ்க்கை தொடங்கியது கன்னட சினிமாவில்தான். ஆனால் இப்போது அவருக்கு கன்னட சினிமாவில் தடை விதிக்க முடிவு செய்ய உள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

இந்நிலையில் ராஷ்மிகா பிரபல தெலுங்கு நடிகர் விஜய் தேவரகொண்டாவை காதலிப்பதாக வதந்திகள் அடிக்கடி வெளியாகிக் கொண்டு உள்ளன. அதைப் பற்றி பேசியுள்ள ராஷ்மிகா “நானாக யாரையாவது காதலிப்பதாக சொல்லும்வரை அது உண்மையில்லை” எனக் கூறியுள்ளார்.