திங்கள், 23 டிசம்பர் 2024
  1. பொழுதுபோக்கு
  2. சினிமா
  3. சினிமா செய்தி
Written By
Last Updated : திங்கள், 16 ஏப்ரல் 2018 (15:54 IST)

ஸ்ரீதேவிக்கு தேசிய விருது; தேர்வுக் கமிட்டி தலைவர் கண்டனம்

மறைந்த நடிகை ஸ்ரீதேவிக்கு தேசிய விருது வழங்கியதற்கு தேர்வுக் கமிட்டி தலைவர் சேகர் கபூர் கண்டனம் தெரிவித்துள்ளார்.

 
சமீபத்தில் 65வது தேசிய விருது அறிவிக்கப்பட்டது. மறைந்த நடிகை ஸ்ரீதேவிக்கு மாம் திரைப்படத்திற்காக சிறந்த நடிக்கைக்கான விருது அறிவிக்கப்பட்டுள்ளது. இதற்கு தற்போது தேசிய விருது வழங்கும் குழுவின் தலைவர் சேகர் கபூர் கண்டனம் தெரிவித்துள்ளார். இதுகுறித்து அவர் கூறியதாவது:-
 
ஸ்ரீதேவி சிறந்த நடிகைதான். ஆனால் மாம் திரைப்படத்திற்காக அவருக்கு தேசிய விருது வழங்கியதை ஏற்க முடியாது என்று பலரும் பேசி வருகின்றனர். ஸ்ரீதேவி இறந்துவிட்டதால் அவருக்கு இந்த விருதை வழங்குகிறார்கள் என்று விமர்சனம் செய்கின்றனர். எனக்கும் ஸ்ரீதேவிக்கும் இடையே நல்ல நட்பு உண்டு.
 
இருந்தாலும் ஸ்ரீதேவிக்கு விருது அறிவிக்கப்பட்டதில் எனக்கு விருப்பம் இல்லை. ஸ்ரீதேவியை தேர்வு செய்வது மற்ற நடிகைகளுக்கு செய்யும் துரோகம் என்று கூறினேன். ஆனாலும் அவரை தேர்வு செய்துவிட்டனர் என்று தெரிவித்துள்ளார்.