ஏப்ரலில் விஷாலின் அயோக்யா – தீயாய் வேலைப் பார்க்கும் படக்குழு !

Last Modified வியாழன், 7 மார்ச் 2019 (13:48 IST)
விஷால் தற்போது நடித்து வரும் அயோக்யா படம் தமிழ்ப் புத்தாண்டை முன்னிட்டு ஏப்ரல் 19 ஆம் தேதி ரிலிஸாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.

தயாரிப்பாளர் சங்கப் பணிகள் மற்றும் நடிகர் சங்கப் பணிகள் என விஷால் பிசியாக இருந்தாலும் சொன்ன நேரத்தில் தனது படங்களை ரிலிஸ் செய்து வருகிறார். அதன் படி சண்டக்கோழி 2 விற்கு பிறகு அயோக்யா எனும் படத்தில் நடித்து வருகிறார். இது தெலுங்கில் ஜூனியர் என்.டி.ஆர் நடிப்பில் வெற்றிபெற்ற படமான டெம்பர் படத்தின் ரீமேக்காகும்.

இந்தப் படத்தை ஏ ஆர் முருகதாஸின் இணை இயக்குனர் வெங்கட் மோகன் இயக்கி வருகிறார். இந்தப் படத்தை லைட் ஹவுஸ் மூவி மேக்கர்ஸ் நிறுவனத்தின் பி.மது தயாரித்து வருகிறார். தமிழ்ப் புத்தாண்டுக்கு வெளியாகும் என அறிவிக்கப்பட்ட அயோக்யா அதற்காக தீவிரமாக படப்பிடிப்புப் பணிகளில் ஈடுபட்டு வருகிறது.

சமீபத்தில் சென்னையில் முக்கியமானக் காட்சிகளை படமாக்கிய இயக்குனர் இன்னும் சில நாட்களில் படப்பிடிப்பை முடிக்கும் மும்முரத்தில் இருக்கிறார். அதன் பின் தயாரிப்பு வேலைகள் தொடங்க இருக்கின்றன. இதனால் படம் ஏப்ரல் 19 ஆம் தேதி வெளியாகும் என நடிகர் விஷால் தனது டிவிட்டர் பக்கத்தில் அறிவித்துள்ளார்.

ஏற்கனவே இந்தப் படத்தின் போஸ்டர் மற்றும் டீசர் வெளியாகி கலவையான விமர்சனங்களைப் பெற்றுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.இதில் மேலும் படிக்கவும் :