திங்கள், 23 டிசம்பர் 2024
  1. பொழுதுபோக்கு
  2. சினிமா
  3. சினிமா செய்தி
Written By CM
Last Updated : வியாழன், 1 மார்ச் 2018 (22:37 IST)

இயக்குநர் மணிரத்னத்துக்கு வாழ்நாள் சாதனையாளர் விருது

இயக்குநர் மணிரத்னத்துக்கு வாழ்நாள் சாதனையார் விருதை வழங்குகிறது கர்நாடக மாநில அரசு. 
பெங்களூர் இண்டர்நேஷனல் பிலிம் பெஸ்டிவல் மற்றும் கர்நாடக அரசு இணைந்து இந்த வருடம் முதல் ‘வாழ்நாள் சாதனையாளர் விருதை’  அறிமுகப்படுத்தியுள்ளன. இந்த விருது, முதன்முதலாக இயக்குநர் மணிரத்னத்துக்கு அறிவிக்கப்பட்டுள்ளது.
 
10 லட்ச ரூபாய் ரொக்கத்தொகையுடன், நினைவுப்பரிசும் வழங்கப்படும். இன்று நடைபெறும் விழாவில் இந்தப் பரிசு வழங்கப்பட இருக்கிறது. கர்நாடக மாநில  முதல்வர் சித்தாராமையா இந்தப் பரிசை வழங்குகிறார்.
 
மணிரத்னம் தற்போது ‘செக்கச்சிவந்த வானம்’ என்ற படத்தை இயக்கி வருகிறார். இந்தப் படத்தில் அரவிந்த் சாமி, சிம்பு, விஜய் சேதுபதி, அருண் விஜய், ஜோதிகா, ஐஸ்வர்யா ராஜேஷ், அதிதி ராவ் ஆகியோர் நடித்து வருகின்றனர்.