விஜய்சேதுபதி இப்படி சொல்வார் என எதிர்பார்க்கவில்லை: இயக்குநர் மணிரத்னம்
தமிழ் ரசிகா்கள் மத்தியில் குறுகிய காலத்தில் தமிழ் சினிமாவில் முன்னணி கதாநாயகர்களின் வரிசையில் இடத்தை பிடித்துள்ள விஜய் சேதுபதி இயக்குநர் மணிரத்னத்திற்கு அதிர்ச்சி அளிக்கும் வகையில் பதில் அளித்துள்ளார்.
கோலிவுட் திரையுலகில் கைவசம் அடுத்தடுத்து படங்கள் என பிசியாக உள்ள ஒரே நடிகர் விஜய்சேதுபதி. விக்ரம் வேதா படத்தை அடுத்து புரியாத புதிர், கருப்பன், என தொடர்ந்து ஒவ்வொரு மாதமும் ஒவ்வொரு படம் வெளியாக தயார் நிலையில் உள்ளது.
இந்நிலையில் திரையுலகில் உள்ள ஒவ்வொருவரின் கனவு மணிரத்னம் இயக்கத்தில் ஒரு படத்திலாவது நடிக்க வேண்டும் என்பதுதான். அந்த கனவும் விஜய்சேதுபதிக்கு நனவாகியுள்ளது. மணிரத்னம் இயக்கும் அடுத்த படத்தில் விஜய்சேதுபதிக்கு முக்கிய வேடத்தில் நடிக்க உள்ளாராம்.
இதனை தொடர்ந்து படத்தில் விஜய்சேதுபதியை தவிர மேலும் மூன்று நாயகர்கள் என்றும்,, அவர்களுடைய பெயரையும் மணிரத்னம் கூறினாராம். அவர்கள் பெயரை கேட்டதும் கொஞ்சம் கூட தயங்காத விஜய்சேதுபதி என்னுடைய கதாபாத்திரம் எனக்கு மிகவும் பிடித்திருக்கின்றது. யார் நடித்தாலும் பரவாயில்லை, நான் நடிக்கின்றேன்' என்ற பதிலை கொஞ்சம் கூட எதிர்பார்க்காத மணிரத்னத்திற்கு ஆச்சரியத்தை ஏற்படுத்தியதாம்.