திங்கள், 23 டிசம்பர் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. தேசியச் செய்திகள்
Written By sivalingam
Last Modified: வியாழன், 21 செப்டம்பர் 2017 (05:03 IST)

காவிரி மேலாண்மையை அமைக்க விட மாட்டோம்: கர்நாடக அரசு உறுதி

மத்திய அரசிதழில் வெளியிட்ட பின்னரும் காவிரி மேலாண்மை வாரியம் அமைப்பதில் தாமதம் ஏன் என மத்திய அரசுக்கு சுப்ரீம் கோர்ட் சமீபத்தில் கேள்வி மேல் கேள்வி கேட்டு நெருக்கடி கொடுத்து வரும் நிலையில் எந்த காரணத்தை முன்னிட்டும் காவிரி மேலாண்மை வாரியம் அமைக்க விட மாட்டோம் என்று கர்நாடக நீர்வளத்துறை அமைச்சர் கூறியுள்ளார். இதனால் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது. 



 
 
கா்நாடகா மாநிலத்தின் நலனுக்கு எதிராக காவிரி மேலாண்மை அமையும் என்பதால் அதை அமைக்க முயற்சித்தால் கா்நாடகா அரசு அதை எதிர்க்கும் என்று நீா்வளத்துறை அமைச்சா் எம்.பி.பட்டீல் கூறியுள்ளது நீதிமன்றத்தை அவமதிப்பது என்றும், அவர் மீது தமிழக அரசு நீதிமன்ற அவமதிப்பு வழக்கு போட வேண்டும் என்றும் சமூக ஆர்வலர்கள் கூறி வருகின்றனர்.
 
இந்த நிலையில் கர்நாடக முதலமைச்சா் சித்தராமையா நேற்று மைசூரு நகரில் நிருபர்களுக்கு பேட்டி அளிக்கையில், சுப்ரீம் கோர்ட் தெரிவித்துள்ள யோசனையின்படி காவிரி கண்காணிப்பு குழு அமைக்கப்படுவதை கர்நாடகா அரசு எதிர்க்கும் என்று கூறியிருந்தார்.