செவ்வாய், 24 டிசம்பர் 2024
  1. பொழுதுபோக்கு
  2. சினிமா
  3. சினிமா செய்தி
Written By VM
Last Updated : செவ்வாய், 23 அக்டோபர் 2018 (12:58 IST)

தனுஷ்க்கு ஜோடியாகும் லட்சுமி மேனன்!

பிரபு சாலமன் இயக்கிய கும்கி படம் தமிழுக்கு அறிமுகம் ஆனவர் லட்சுமி மேனன். பல  ஹிட் படங்களில் நடித்தவர் பின்னாளில் பட வாய்ப்புகளை இழந்தார். இதனால் லட்சுமி மேனன் பரத நாட்டியத்தில் கவனம் செலுத்தி வருகிறார். 

தற்போது புதிதாக வந்துள்ள தகவலின்படி, லட்சுமி மேனனுக்கு தமிழில் பெரிய வாய்ப்பு ஒன்று கிடைத்துள்ளது தெரியவந்துள்ளது.
 
வட சென்னை படத்துக்கு பிறகு தனுஷ் ராட்சசன் படத்தை இயக்கிய ராம்குமார் இயக்கத்தில் புதிய படத்தில் நடிக்க உள்ளார். இந்த படத்தில் தனுஷ்க்கு ஜோடியாக லட்சுமி மேனன் நடிக்க உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. விரைவில அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாகும் என  எதிர்பார்க்கப்படுகிறது.