திங்கள், 27 ஜனவரி 2025
  1. பொழுதுபோக்கு
  2. சினிமா
  3. சினிமா செய்தி
Written By
Last Updated : திங்கள், 22 அக்டோபர் 2018 (15:03 IST)

வடசென்னை படத்தில் ஆபாச வசனங்கள் - வெற்றிமாறன் மீது புகார்

வடசென்னை படத்தில் ஆபாச வசனங்கள் இடம்பெற்றிருப்பதாக கூறி இயக்குனர் வெற்றிமாறன் மீது நடவடிக்கை எடுக்க வேண்டுமென போலீஸ் கமி‌ஷனர் அலுவலகத்தில் புகார் கொடுக்கப்பட்டுள்ளது. 
 
நடிகர் தனுஷ் மற்றும் ஐஸ்வர்யா ராஜேஷ் நடிப்பில் வெளிவந்து வெற்றிநடை போட்டு கொண்டிருக்கும் வடசென்னை படம்,  ரவுடிகளுக்குள் ஏற்படும் மோதலை மைய்ய கருவாக கொண்டு எடுக்கப்பட்டுள்ளது.  மேலும் இந்த படத்தில் ஆபாச வசனங்கள் இருப்பதாகவும் பரவலான விமர்சனங்கள் எழுந்துள்ளது.
 
இந்நிலையில் சமூக நீதிக்கான வழக்கறிஞர்கள் சங்க தலைவர் சார்லஸ் அலெக்சாண்டர் சென்னை போலீஸ் கமி‌ஷனர் அலுவலகத்தில் இயக்குனர் வெற்றி மாறன் மீது புகார் மனு கொடுத்துள்ளார். 
 
அந்த புகாரில் அவர் குறிப்பிட்டிருப்பது, நடிகர் தனுஷ் நடித்துள்ள ‘வடசென்னை’ படத்தில் ஆபாச வசனங்கள் நிறைய உள்ளது, முகம் சுழிக்கும் வகையிலான வசனங்கள் சமூக அக்கறை இல்லாமல் பார்ப்பவர்களின்  மனதை புண்படுத்தி காயப்படுத்தும் நோக்கத்தில் எழுதபட்டுள்ளதாக  என்று குறிப்பிடப்பட்டுள்ளது.
 
மேலும்,பொது இடங்களில் இதுபோன்ற ஆபாச வார்த்தைகள் பேசுவதும் , பாடுவதும்  இந்திய தண்டனை சட்டத்தின்கீழ் குற்றம் என தெரிந்தும் இவ்வாறு வசனங்கள் எழுதிய இயக்குனர் வெற்றிமாறன் மீது சட்டபடி நடவடிக்கை எடுக்க வேண்டும் என சார்லஸ் அலெக்சாண்டர் என்பவர் சென்னை கமிஷனர் அலுவலகத்தில் புகார் அளித்துள்ளார்.