செவ்வாய், 24 டிசம்பர் 2024
  1. பொழுதுபோக்கு
  2. சினிமா
  3. சினிமா செய்தி
Written By
Last Updated : திங்கள், 22 அக்டோபர் 2018 (11:50 IST)

பேரனின் ஆசையை நிறைவேற்ற ஆட்டோவில் பயணம் செய்த ரஜினிகாந்த்

பேரனின் ஆசையை நிறைவேற்ற நடிகர் ரஜினிகாந்த் தனது மகள் மற்றும் பேரனுடன் ஆட்டோவில் பயணம் செய்துள்ளார். ரஜினி ஆட்டோவில் வருவதை பார்த்த ரசிகர்கள் உற்சாகத்துடன் கை அசைத்தனர்.
 
போயஸ் கார்டன் இல்லத்தில் வசித்து வரும் நடிகர் ரஜினிகாந்த் நேற்று அவரது இளைய மகள் சவுந்தர்யா, பேரன் வேத் கிருஷ்ணாவுடன் விளையாடிக் கொண்டிருந்தார்.
 
அப்போது பேரன் வேத் "தாத்தா எனக்கு ஆட்டோவில் பயணம் செய்ய ஆசையாக இருக்கிறது " என்றார். பேரனின் விருப்பத்தை நிறைவேற்ற போயஸ் தோட்டம் அருகே ஸ்டாண்டில் இருந்த ஆட்டோவை வரவழைத்த ரஜினி, பின்னர் பேரன் மற்றும் மகளுடன் தனுஷ் வீட்டுக்கு சென்றார். அங்கு சிறிது நேரம் இருந்த ரஜினி பிறகு காரில் புறப்பட்டு மீண்டும் போயஸ் தோட்டத்துக்கே சென்றுவிட்டார். 
 
நடிகர் ரஜினிகாந்த் திடீரென்று ஆட்டோவில் வருவதை கண்ட ரசிகர்கள் பலர் கையசைத்து மகிழ்ச்சியை வெளிப்படுத்தினர்.