செட் ஃபுல்லா சேட்டை தான் - சுல்தான் படத்தில் ராஷ்மிகாவின் ரகளை - வீடியோ!

Papiksha Joseph| Last Updated: சனி, 27 மார்ச் 2021 (09:50 IST)

எஸ்ஆர் பிரபு தயாரிப்பில் கார்த்தி மற்றும் ராஷ்மிகா மந்தனா நடிப்பில் உருவாகியுள்ள சுல்தான் படத்தை இயக்குநர் பாக்யராஜ் கண்ணன் இயக்கியுள்ளார். இவர் சிவகார்த்திகேயன் நடித்த ரெமோ படத்தை இயக்கியவர்.
முதல் படத்தைப் போல இல்லாமல் ஆக்ஷன் மற்றும் ரொமான்ஸ் கலந்த படமாக உருவாகியுள்ள சுல்தான் படத்தின் படப்பிடிப்பு முடிந்து ரிலீஸுக்கு தயாராக உள்ளத நிலையில் இப்படம் வரும் ஏப்ரல் 2 ஆம் தேதி ரிலீஸாக உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

அண்மையில் இப்படத்தின் ட்ரைலர் வெளியாகி படத்தின் மீதான எதிர்பார்ப்பினை அதிகரிக்கசெய்தது. இந்நிலையில் தற்போது இப்படத்தில் தான் நடித்த அனுபவத்தை குறித்து நடிகை ராஷ்மிகா மந்தனா பகிர்ந்துகொண்ட மேக்கிங் வீடியோ வெளியாகி ரசிக்கும்படியாக உள்ளது.


இதில் மேலும் படிக்கவும் :