திங்கள், 23 டிசம்பர் 2024
  1. பொழுதுபோக்கு
  2. சினிமா
  3. சினிமா செய்தி
Written By Sinoj
Last Modified: புதன், 26 மே 2021 (16:58 IST)

ஃபாலோயர்ஸ் அதிகம்… மகிழ்ச்சி இல்லை… பிக்பாஸ் பிரபலம் உருக்கம் !

தமிழ் சினிமாவில் முக்கிய இயக்குநரும் நடிகருமான சேரன் டுவிட்டர் பக்கத்தில் ஃபாலோ செய்பவர்களின் எண்ணிக்கை 1 லட்சம் தாண்டியுள்ளது. ஆனால் இதற்கு அவர் வருத்தம் தெரிவித்துள்ளார்.

பொற்காலம், பொக்கிஷம், ஆட்டோகிராஃப் போன்ற படங்களை இயக்கிவர் சேரன். இவர் சமீபத்தில் இயக்கிய படம் திருமணம். இப்படத்தில் தேவையில்லாத செலவுகளை திருமணத்தில் குறைக்க வேண்டும் என்பதைக் கூறுவதாக அமைந்திருந்தது. இவர் கமல்ஹாசன் தொகுத்து வழங்கும் பிக்பாஸ் நிகழ்ச்சியில் கலந்துகொண்டதன் மூலம்  இவருக்கு ரசிகர்கள் பரவலாயினர்.

இந்நிலையில், இவரை டுவிட்டரில் பின் தொடர்பவர்களின் எண்ணிக்கை 1 லட்சத்தைத் தாண்டியுள்ளது.

இந்நிலையில், சேரனின் ரசிகை அவரிடம் ட்விட்டர்  1 லட்சம்  பாலோயர்களைப் பெற்றுள்ளதற்கு வாழ்த்துகள் அப்பா எனத் தெரிவித்தார்.

இதற்குப் பதிலளித்த சேரன், உலகில் மக்களின் எண்ணிக்கை நம் நண்பர்களின் எண்ணிக்கை, நம் உறவினர்களின் எண்ணிக்கை குறைந்து கொண்டிருப்பதால் இதில் உயரும் நண்பர்கள் எண்ணிக்கையால் சந்தோசம் கொள்ள முடியவில்லைம்மா...

கொரோனா பிடியில் ஏகப்பட்ட உயிர்களை இழந்திருக்கிறோம். இனியும் இழக்காமல் இருக்க முயல்வோம்.. எனத் தெரிவித்துள்ளார்.