வியாழன், 23 ஜனவரி 2025
  1. பொழுதுபோக்கு
  2. சினிமா
  3. சினிமா செய்தி
Written By Prasanth Karthick
Last Modified: திங்கள், 28 அக்டோபர் 2024 (14:50 IST)

இந்தியர்கள் பாகிஸ்தானுக்கு தீவிரவாதிகள்?? சாய் பல்லவி பேச்சால் சர்ச்சை! - ட்ரெண்டாகும் #BoycottSaiPallavi

சிவகார்த்திகேயன், சாய் பல்லவி நடித்த அமரன் திரைப்படம் தீபாவளிக்கு வெளியாக உள்ள நிலையில் சமீபத்தில் சாய் பல்லவி அளித்த பேட்டி சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.

 

 

இயக்குனர் ராஜ்குமார் பெரியசாமி இயக்கத்தில் சிவகார்த்திகேயன் நடித்து தயாராகியுள்ள படம் ‘அமரன்’. இதில் சிவகார்த்திகேயனுக்கு ஜோடியாக சாய் பல்லவி நடித்துள்ளார். இந்த படம் தீபாவளிக்கு (அக்டோபர் 31) ரிலீஸாக உள்ள நிலையில் படத்தின் ப்ரோமோஷன் பணிகள் நடந்து வருகின்றன.

 

சமீபத்தில் இந்திய ராணுவ வீரர்கள் நினைவிடத்திற்கு சென்று சாய் பல்லவி மரியாதை செய்திருந்தார். இந்நிலையில் தற்போது சாய் பல்லவியின் பேட்டி ஒன்று சமூக வலைதளங்களில் ட்ரெண்டாகி சர்ச்சைக்குள்ளாகி வருகிறது.

 

அந்த நேர்க்காணலில் தீவிரவாதம் குறித்து பேசும் அவர், பாகிஸ்தானியர்களை இந்தியாவில் தீவிரவாதிகளாக பார்ப்பது போல, இந்தியர்களையும் பாகிஸ்தானியர்கள் தீவிரவாதிகளாக கருதுவதாக பேசியிருந்தார். அமரன் படத்திலும் கூட இதுகுறித்த வசனம் ஒன்று வந்துள்ளது. 
 

 

இந்நிலையில் இந்திய ராணுவம் குறித்து சர்ச்சைக்குரிய வகையில் பேசியதாக அந்த வீடியோவை பகிர்ந்து வரும் பலர்  #BoycottSaiPallavi என்ற ஹேஷ்டேகை ட்ரெண்ட் செய்து வருகின்றனர். அதேசமயம் சாய் பல்லவிக்கு ஆதரவாக பேசி வரும் பலர், அவர் மதவாத எண்ணம் குறித்துதான் பேசியுள்ளதாகவும், இந்திய ராணுவத்தை தவறாக பேசவில்லை என்றும் கூறி வருகின்றனர்.

 

இன்னும் சில தினங்களில் அமரன் வெளியாக உள்ள நிலையில் சாய்பல்லவிக்கு எதிர்ப்புகள் எழுந்துள்ளது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

 

Edit by Prasanth.K