1. பொழுதுபோக்கு
  2. சினிமா
  3. சினிமா செய்தி
Written By Sinoj
Last Modified: புதன், 30 மார்ச் 2022 (22:08 IST)

'ஜென்டில்மேன்' பட தயாரிப்பாளரை சந்தித்த ஷங்கர் !

தமிழ் சினிமாவில் முன்னணி இயக்குநர் ஷங்கரின் மகளுக்கு திருமணம் ஏற்பாடுகள் நடப்பதாக தகவல் வெளியாகிறது.

தமிழ் சினிமாவில் முன்னணி இயக்கு நர் ஷங்கர். இவர்   விஜய் ,  ரஜினி, கமல், விக்ரம் என முன்னனி நடிகர்களின் நடிப்பில் சூப்பர் ஹிட் படங்களை இயக்கியுள்ளார்.

தற்போது, தெலுங்கு நடிகர் ராம்சரண் நடிப்பில் ஒரு பிரமாண்ட படத்தை இயக்கி வருகிறார்.

இந்நிலையில்,  ஷங்கர் தனது மகளுக்கு திருமண அழைப்பிதல் வழங்க தயாரிப்பாளர் கே.டி. குஞ்சுமோனை சந்தித்தார். இதுகுறித்த புகைப்படம்  வைரலான நிலையில், ஷங்கரின் இளைய மகளும் நடிகையுமான அதிதிக்கு திருமணமா என பலரும் கேள்வி எழுப்பினர்.


இந்நிலையில்,  கடந்தாண்டு கொரானா கட்டுப்பாடுகள் இருந்ததால், ஷங்கரின் மூத்த மகள் ஐஸ்வர்யாவுக்கு திருமண வரவேற்பு நடத்தவில்லை; அதனால் தற்போது திரையுல நண்பர்கள் நட்சத்திரங்களை அழைத்து    வரவேற்பை நடத்த திட்டமிட்டுள்ளார்.