"சேரனுடன் சண்டையிட்ட பாத்திமா" இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல! ப்ரோமோ வீடியோ!

Last Updated: திங்கள், 24 ஜூன் 2019 (14:02 IST)
பிக்பாஸ் தமிழின் மூன்றாம் பாகம் நேற்று(ஜூன்.23) தொடங்கியது. வழக்கம் போல கமல்ஹாசனே தொகுத்து வழங்க, பிரம்மாண்டமாய் இந்த நிகழ்ச்சியின் முதல் எபிசோட் ஒளிபரப்பானது. 
 

 
இந்நிகழ்ச்சியின் முதல் போட்டியாளராக பிரபல செய்தி வாசிப்பாளராக பாத்திமா பாபு நுழைந்தார்.  பிரபல தனியார் தொலைக்காட்சி ஒன்றில் செய்தி வாசிப்பாளராக நுழைந்து மீடியா உலகில் அறிமுகமானவர். 
 
இந்நிலையில் பிக்பாஸ் நிகழ்ச்சியின் இன்றைய இரண்டாவது ப்ரோமோ வீடியோ ஒன்று சற்றுமுன் வெளிவந்துள்ளது. அந்த வீடியோவில், பிக் பாஸ் வீட்டில் தண்ணீரும், எரிவாயுவும் அளவாகவே அளிக்கபடும் என்று பிக்பாஸ் போட்டியாளர்களுக்கு அறிவுறுத்துகிறார். அதனை கேட்ட போட்டியாளர்கள் அனைவரும் கைதட்டி வரவேற்றனர். உடனே பாத்திமா  தண்ணீரை சிக்கனமாக செலவழிக்க வேண்டும் என்பது ஒரு அவல நிலை அது கைதட்டி வரவேற்கும் ஒரு விஷயம் இல்லை என்று அதிருப்தியாக கூறுகிறார். 
 
இதை தடுத்து பேசும் சேரன்  தண்ணீரை குறைவாக செலவு செய்ய வேண்டும் என்ற கட்டுப்பாட்டை கொண்டு வந்ததைத்தான் வருகேற்றுகிறோம் என்று கறாராக கூறுகிறார். இப்படியாக அந்த ப்ரோமோ முடிகிறது. 
 
இரண்டாவது ப்ரோமோவிலே சண்டை ஆரம்பமாகிவிட்டது என இந்த வீடியோவை பார்த்த பிக்பாஸ் ரசிகர்கள் கூறுகிறார்கள்.
 


இதில் மேலும் படிக்கவும் :