காதலுக்கு எதிர்ப்பு : நடுரோட்டில் இளைஞர் வெட்டிக்கொலை ! பகீர் சம்பவம்

hydrabad
Last Modified ஞாயிறு, 9 ஜூன் 2019 (11:27 IST)
தெலங்கானா மாநிலம் ஹைதராபத்தில் வசித்து வந்த இம்தியாஸ் - ஃபாத்திமா இருவரும் கடந்த சில வருடங்களாகக் காதலித்து வந்துள்ளனர்.  ஆனால் இவர்களின் காதலை ஃபாத்திமாவின் குடும்பத்தினர் ஏற்கவில்லை.
இந்நிலையில் பெற்றொருக்கு பேச்சை மீறி கடந்த ஜூன் 6 ஆம் தேது திருமணம் செய்துஜ்கொண்டனர். ஆனால் ஃபாத்திமா குடும்பத்தினர் மகளைக் காணவில்லை என்று போலீஸ் ஸ்டேசனில் புகார் அளித்துள்ளனர்.
 
இதையடுத்து போலீஸார் விசாரித்தில், இம்தியாஸ் - ஃபாத்திமா இருவரும் காதலித்து வந்ததையும் , அதற்கு பெற்றோர் எதிர்ப்பு தெரிவித்ததை அடுத்து இருவரும் திருமணம் செய்துகொண்டனர் என்பது தெரியவந்ததை அடுத்து பெண் மேஜர் என்பதால் அவள் விரும்பியவருடன் வாழலாம் என்பதால் போலிஸார் ஃபாத்திமா குடும்பத்தாரிடம் பேசியுள்ளனர்.
 
பின்னர், ஃபாத்திமாவின் அப்பா , இம்தியாஸாவின் செல்போனுக்கு அழைத்து உங்களை மருமகனாக ஏற்றுகொள்கிறேன். நீங்கள் மகளை அழைத்து வீட்டுக்கு வாருங்கள் என்று அழைத்துள்ளார்.இதற்கு இம்தியாஸின் குடும்பத்தினர் இருவரையும் அழைத்துள்ளனர்.
 
இதனையடுத்து ஹைதராபாத் சாலையில் 9 பேர் கொண்ட கும்பல் இம்தியாஸை சுற்றிவளைத்து கத்தியால் குத்தி தாக்குதல் நடத்தியது. ஃபாத்திமாவின் சகோதரர்களும் இம்தியாஸை சரமாரியாகத் தாக்கியுள்ளனர். இந்த சம்பவம் அங்குள்ள சிசிடிவி கேமராவில் பதிவாகி இருந்தது.
 
இந்தத் தாக்குதலில் இம்தியாஸுக்கு பலத்த காயங்கள் ஏற்பட்டு தற்பொழுது ஒரு தனியார் மருத்துமனையில் சிகிச்சை பெற்றுவருகிறார்.இதுகுறித்து காவல்துறையினர் வழக்குப்பதிவுசெய்து 5 பேரை கைதுசெய்துள்ளதாகவு, மற்ற குற்றவாளிகளைத் தேடிவருவதாகவும் தகவல் தெரிவிக்கின்றன.
 


இதில் மேலும் படிக்கவும் :