ஞாயிறு, 29 டிசம்பர் 2024
  1. பொழுதுபோக்கு
  2. சினிமா
  3. சினிமா செய்தி
Written By
Last Updated : செவ்வாய், 19 டிசம்பர் 2017 (21:52 IST)

ரஜினி ரசிகர்களுக்கு விதிக்கப்பட்ட அதிரடி கட்டுபாடுகள்!

நடிகர் ரஜினி அவரது ரசிகர்களை சந்திக்க உள்ள நிலையில், சந்திக்க வரும் ரசிகர்களுக்கு அதிரடியாக சில கட்டுபாடுகள் விதிக்கப்பட்டுள்ளது.

 
நடிகர் ரஜினிகாந்த் அவரது ரசிகர்களை வரும் 26ஆம் தேதி முதல் 31ஆம் தேதி வரை சந்திக்க உள்ளார். சென்னை கோடம்பாக்கத்தில் உள்ள ராகவேந்திரா மண்டபத்தில் காலை 7 மணி முதல் மாலை 3 மணி வரை இந்த சந்திப்பு நிகழ்ச்சி நடைபெற உள்ளது.
 
கடந்த மே மாதம் 15 மாவட்டங்களில் உள்ள ரசிகர்களை சந்தித்தார். தற்போது மீதமுள்ள 17 மாவட்டங்களில் உள்ள ரசிகர்களை சந்திக்க உள்ளார். ஒவ்வொரு மாவட்டத்திலும் ரசிகர் மன்றத்தில் செயல்படுபவர்களை தேர்வு செய்து பட்டியலை மாவட்ட தலைமைக்கு அனுப்பி வைத்துள்ளனர்.
 
அந்த பட்டியலை இறுதி செய்து ரஜினியை சந்திப்பதற்கான பட்டியல் விவரம் தயார் செய்யப்பட்டுள்ளது. மேலும் ரஜினியை சந்திக்க இருக்கும் ரசிகர்களுக்கு அதிரடியாக பல கட்டுபாடுகள் விதிக்கப்பட்டுள்ளது. ரஜினியை சந்திக்க வரும் ரசிகர்கள் அடையாள அட்டை இருந்தால் மட்டுமே உள்ளே அனுமதிக்கப்படுவர். ரசிகர்கள் யாரும் தங்களது குடும்பங்களை உடன் அழைத்து வர கூடாது. ரஜினிகாந்த் காலில் ரசிகர்கள் யாரும் விழக்கூடாது.
 
இவ்வாறு பல ரசிகர்களுக்கு பல கட்டுபாடுகள் விதிக்கப்பட்டுள்ளது. ரசிகர்களுக்கு மதிய உணவு மண்டபத்திலே வழங்கப்பட உள்ளது. ஒவ்வொரு மாவட்டத்தில் இருந்தும் சுமார் 400 முதல் 500 பேர் வரை தேர்வு செய்யப்பட்டுள்ளனர்.