ஞாயிறு, 29 டிசம்பர் 2024
  1. பொழுதுபோக்கு
  2. சினிமா
  3. சினிமா செய்தி
Written By VM
Last Updated : வியாழன், 14 பிப்ரவரி 2019 (18:04 IST)

என்ஜிகே டீசரை பார்த்து தனுஷ் என்ன சொன்னார் தெரியுமா?

சூர்யா நடிப்பில் வெளியாகி உள்ள என்ஜிகே டீசரை பார்த்து வியந்து போன தனுஷ் வெகுவாக பாராட்டி உள்ளார்.


 
நடிகர் தனுஷின் அண்ணணும் பிரபல இயக்குநருமான செல்வராகவன், சூர்யாவை வைத்து என்ஜிகே என்ற படத்தை எடுத்துள்ளார். இந்த படத்தில் சாய் பல்லவி , ரகுல் ப்ரீத்தி சிங் ஆகியோர் ஹீரோயினாக   நடித்துள்ளனர். 
 
என்ஜிகே  டீசர் காதலர் தினத்தை முன்னிட்டு இன்று வெளியாகி உள்ளது. இந்த படத்தில் நந்த கோபாலன் குமார் என்ற பெயரில் சூர்யா அரசியல்வாதியாக நடித்துள்ளார். இந்த டீசரை பார்த்து திரைப்பிரபலங்கள் பலரும் பாராட்டி வருகிறார்கள். அந்த வகையில் தனது அண்ணன் செல்வராகவன் இயக்கியுள்ள இப்படத்தின் டீசரை தனுஷ் வெகுவாக பாராட்டி உள்ளார். "என்ஜிகே பவர் புல் டீசர்.  சூர்யா இந்த டீசர் முழுவதும் கலக்கி உள்ளார்.



சூர்யா சார் அற்புதம்.  செல்வராகவனின் படம் ... வேறு என்ன சொல்ல... இதற்கு மேல் இந்த படத்தை பார்க்க காத்திருக்க முடியாது. இந்த படம் வெற்றி பெற வாழ்த்துக்கள்" என்றார்.