திங்கள், 23 டிசம்பர் 2024
  1. பொழுதுபோக்கு
  2. சினிமா
  3. சினிமா செய்தி
Written By Sinoj
Last Updated : சனி, 6 ஏப்ரல் 2024 (19:52 IST)

ரசிகர்கள் விமர்சனம்...அஜித் செய்த முயற்சி..ஆனால் இப்படி ஆயிடுச்சே!

அஜித் நடிப்பில், மகிழ்திருமேனி இயக்கத்தில், லைகா தயாரிப்பில் உருவாகி வரும் படம் விடாமுயற்சி.
 
விடாமுயற்சி ஷூட்டிங் மீண்டும் எப்போது என்ற கேள்வி எழுந்தது. சமீபத்தில் அவர் ஆரவ்வுடன் கார் ஓட்டிச் செல்லும்போது விபத்து ஏற்பட்ட வீடியோவை Lyca  வெளியிட்டது. 
 
இது வைரலாகி, அஜித் பாதுகாப்புடன் வாகனம் ஓட்ட வேண்டும் என்று ரசிகர்கள் கூறிவருகின்றனர்.
 
இதற்கிடையே நடிகர் அஜித் பற்றி சமூக வலைதளங்களில் பல்வேறு விமர்சனங்கள் எழுந்ததாக கூறப்படுகிறது.
 
சமூக வலைதளத்தில் வேறு பெயரில் உள்ள  அஜித்திற்கு வருத்தத்தை ஏற்படுத்தியதாக தெரிகிறது. இதைப் பார்த்த அஜித்  ’’உயிரைக் கொடுத்த விடாமுயற்சி படத்தில்  நடித்து வருகிறோம். ஆனால், இப்படி  விமர்சிக்கிறார்களே’’ என்ற கடுப்பில்தான் லைகாவை அந்த வீடியோவை வெளியிடும்படி கூறினார் என தகவல் வெளியாகிறது.
 
இந்த  நிலையில், வரும் மே 1 ஆம் தேதி அஜித் பிறந்த நாளில் விடாமுயற்சி பட அப்டேட் -அதாவது ஒரு போஸ்டர்   வெளியாகும் என கூறப்படுகிறது.
 
மக்களவை தேர்தல் முடிந்த பின் அஜித் உள்ளிட்ட படக்குழுவினர் ஷூட்டிங்கிற்கு மீண்டும் வெளிநாடு செல்லவுள்ளதாக தகவல் வெளியாகிறது.