வியாழன், 9 ஜனவரி 2025
  1. பொழுதுபோக்கு
  2. சினிமா
  3. சினிமா செய்தி
Written By Sinoj
Last Modified: திங்கள், 18 மார்ச் 2024 (21:35 IST)

அஜித்தின் அடுத்தடுத்த படங்களை தயாரிக்கிறதா லைகா?

ajithkumar
தமிழ் சினிமாவின் முன்னணி நடிகர் அஜித்குமார். இவர் தற்போது மகிழ்திருமேனி இயக்கத்தில் விடாமுயற்சி என்ற படத்தில் நடித்து வருகிறார். இப்படத்தை லைகா நிறுவனம் தயாரிக்கிறது.
 
இப்படத்தின் ஷூட்டிங் சமீபத்தில் அஜர்பைஜானில் தொடங்கியது. இதில் அஜித், திரிஷா உள்ளிட்ட படக்குழுவினர் கலந்துகொண்டனர்.
 
அடுத்தகட்ட ஷூட்டிங் ஜார்ஜியாவில் தொடங்கும் என தகவல் வெளியானது.
 
இந்த நிலையில், இப்படம் தற்போது லைகாவுக்கு ஏற்பட்ட நிதி நெருக்கடியால் தற்காலிகமாக  நிறுத்தி வைக்கப்பட்டதாக கூறப்பட்டது.
 
சமீபத்தில் உடல் நலக்குறைவால் பாதிக்கப்பட்டு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு, அறுவைச் சிகிச்சை மேற்கொண்ட அஜித்குமார்,வீட்டில்  ஓய்வெடுத்து வருகிறார்.
 
பூரண குணமடைந்த பின், அஜித்குமார் விடாமுயற்சி பட ஷூட்டிங்கில் கலந்துகொள்வார் என தெரிகிறது.
 
இந்த நிலையில் ஒரு புதிய தகவல் ஒன்று வெளியாகியுள்ளது. அதில், அஜித்குமார் ஒரு  நிறுவனத்தின் தயாரிப்பில் நடிக்க ஒப்புக் கொண்டால், தொடர்ந்து 3 படங்கள்   நடித்து வந்த நிலையில், விடாமுயற்சி படத்தை தொடர்ந்து லைகாவுக்கும் அதேமாதிரி தொடர்ந்து படங்கள் நடிக்க ஒப்புக்கொள்வார் என அந்த நிறுவனம் அவரிடம் கேட்டதாக கூறப்படுகிறது.
 
ஆனால், இப்படத்தின் ஷூட்டிங், சம்பளம் தயாரிப்பு செலவுகளை எல்லாம் பார்த்த அஜித், இன்னும் சிக்னல் கொடுக்கவில்லை என கூறப்படுகிறது.
 
இதனால் அவரது அடுத்த படத்தை வேறு ஒரு நிறுவனம் தயாரிக்கும் என தகவல் வெளியாகிறது.