செவ்வாய், 24 டிசம்பர் 2024
  1. பொழுதுபோக்கு
  2. சினிமா
  3. சினிமா செய்தி
Written By Papiksha Joseph
Last Updated : வியாழன், 30 ஏப்ரல் 2020 (18:05 IST)

புட்டபொம்மா பாடலுக்கு குடும்பத்துடன் ஆட்டம் போட்ட ஆஸ்திரேலியா கிரிக்கெட் வீரர் - கியூட் வீடியோ!

புட்டபொம்மா பாடலுக்கு ஆஸ்திரேலியா கிரிக்கெட் வீரர் டேவிட் வார்னர் குடும்பத்துடன் ஆடிய கியூட் டான்ஸ் வீடியோ இணையத்தில் வைரல்.

டிக்டாக்கில் எப்போதும் சினிமா பாடல்களை மரு உருவாக்கம் செய்வதில் பயணர்கள் ஆர்வம் காட்டுவர். அந்த வகையில் கடந்த காலங்களில் ரௌடி பேபி உள்ளிட்ட பாடல்கள் வைரல் ஆகின. அந்த வரிசையில் சமீப நாட்களாக பிரபல தெலுங்கு நடிகர் அல்லு அர்ஜுன் - பூஜா ஹெக்டே நடிப்பில் வெளியான  'அல வைக்குந்தாபுராமுலு' படத்தில் இடம்பெற்ற "புட்ட பொம்மா" மொழி தெரியாத மக்களும் விரும்பி கேட்கும் பாடலாக இருக்கிறது.

குறிப்பாக இந்த பாடலின் டான்ஸ் ஸ்டெப் அனைவரையும் வெகுவாக ஈர்த்துவிட்டது. தெலுங்கு  மொழியில் வெளியான இந்த பாடல் டிக் டாக்கில் பிச்சிகிட்டு பறக்கிறது. இந்நிலையில் தற்போது பிரபல ஆஸ்திரேலியா கிரிக்கெட் வீரரான டேவிட் வார்னர் தான் விளையாடும் சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணியின் ஜெர்சியை அணிந்து கொண்டு, மனைவி கேண்டிஸ் மற்றும் மகளுடன் அல்லு அர்ஜுனின் புட்டபொம்மா பாடலுக்கு செம கியூட்டாக நடனமாடிய டிக்டாக் வீடியோவை இன்ஸ்டாவில் வெளியிட்டு அனைவரையும் ஈர்த்துவிட்டார். இணையத்தில் வைரலாகும் அந்த வீடியோ இதோ...
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 

It’s tiktok time #buttabomma get out of your comfort zone people lol @candywarner1

A post shared by David Warner (@davidwarner31) on