உங்கள் கணவரை விவாகரத்து செய்துவிடுங்கள்… சமந்தாவிடம் கூறிய ரசிகர்!
நடிகை சமந்தாவிடம் உங்கள் கணவரை விவாகரத்து செய்து விடுங்கள் என ஒரு ரசிகர் அத்துமீறி கூறியிருப்பது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
தமிழ் மற்றும் தெலுங்கு சினிமாவில் முன்னணி நடிகையாக வலம் வந்தவர் நடிகை சமந்தா. ஆனால் தன்னுடன் நடித்த நாக சைதன்யாவை திருமணம் செய்துகொண்டு ஆந்திராவிலேயே செட்டில் ஆகிவிட்டார். திருமணத்துக்குப் பிறகு தொடர்ந்து அவர் படங்களில் நடித்தாலும் அதிக பட வாய்ப்புகள் அவருக்குக் கிடைக்கவில்லை. தமிழில் இப்போது அவருக்கு காத்து வாக்குல ரெண்டு காதல் திரைப்படம் மட்டுமே கைவசம் உள்ளது.
இந்நிலையில் சமூகவலைதளத்தில் சமந்தாவின் ரசிகர் ஒருவர் நாக சைதயன்யாவை விவாகரத்து செய்துவிடுங்கள் என துணுக்கு தனமாக பேசியுள்ளார். அவருக்கு பதிலளித்த சமந்தா என்னால் முடியாது. வேண்டுமென்றால் சைதன்யாவிடம் இதை சொல்லுங்கள் எனக் கூறியுள்ளார்.