புதன், 25 டிசம்பர் 2024
  1. பொழுதுபோக்கு
  2. சினிமா
  3. சினிமா செய்தி
Written By Sinoj
Last Modified: சனி, 30 ஜனவரி 2021 (18:32 IST)

சோனு சூட்டிற்காக ஒரு ரசிகர் 2 ஆயிரம் கி.,மீ சைக்கிள் பயணம்

கடந்தாண்டு கொரொனா கால ஊரடங்கில் ஏழைகள், புலம்பெயர்ந்தோர், மாணவர்கள்,விவசாயிகள் எனப் பலதரப்பட்டவர்களுக்கு தன் சொத்தை அடமானம் வைத்து உதவிய நடிகர் சோனு சூட்டிற்கு மக்கள் கோயில் கட்டி கும்பிட்டனர்.

இந்நிலையில் அவருக்கு மக்களின் ஆதரவு நாளுக்கு நாள் பெருகி வருகிறது.அவர் இனிதான் சினிமாவில் வில்லனாக நடிப்பதில்லை என்று உறுதியாகத் தெரிவித்து நிலையில் அவருக்கு ஹீரோ வாய்ப்புகள் குவிந்து  வருகிறது.

இந்நிலையில் நடிகர் சோனு சூட்டிற்காக அவரது ரசிகர் ஒருவர் சுமார் 2 ஆயிரம் கிமீ தூரம்சைக்கிள் பயணம் மேற்கொள்வதாக கூறியுள்ளார்.

மஹராஷ்டிரமாநிலத்தில் வசிக்கும் நாராயணன் வியாஸ், நடிகர் சோனு சூட் மக்களுக்கு செய்துவரும் சேவைகளுக்காக 2000- கிலோ மீ தூரம் சைகிள் பயணம் செய்யவிருப்பதாகக் கூறியுள்ளார். இவரது முடிவுக்கு சோனுவின் ரசிகர்கள் ஆதரவு தெரிவித்துப் பாராட்டிவருகின்றனர்.