குடும்பத்துடன் புத்த மதத்துக்கு மாறிய பிரபல நடிகர்!
தமிழ் சினிமாவில் ஆரண்ய காண்டம் திரைப்படம் மூலமாக கவனம் பெற்றவர் நடிகர் தீனா.
ஆரண்ய காண்டம் திரைப்படத்தில் அவர் நடித்திருந்த கஜபதி கதாபாத்திரம் வெற்றியடையவே தொடர்ந்து பல படங்களில் வில்லனாகவும், நகைச்சுவை மற்றும் குணச்சித்திர பாத்திரங்களிலும் நடித்துள்ளார். அவற்றில் . எந்திரன், ராஜா ராணி, தெறி, மாநகரம், மெர்சல், வட சென்னை, பிகில், மாஸ்டர், போன்ற படங்கள் குறிப்பிட்டு சொல்ல தகுந்தவை.
இந்நிலையில் இப்போது அவர் தனது குடும்பத்தோடு புத்த மதத்துக்கு மாறியுள்ளார். புத்த பிட்சு ஒருவர் முன்னிலையில் 22 உறுதிமொழிகளை ஏற்று அவர் குடும்பத்தினர் புத்த மதத்துக்கு மாறியுள்ளனர்.