வெள்ளி, 27 டிசம்பர் 2024
  1. பொழுதுபோக்கு
  2. சினிமா
  3. சினிமா செய்தி
Written By
Last Modified: புதன், 27 நவம்பர் 2019 (22:04 IST)

மீண்டும் ரஜினிக்கு ஜோடியாகும் ‘90’களின் நடிகைகள்

சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் அவர்களுக்கு ஜோடியாக கடந்த 90களில் நடித்த நடிகைகளில் ஒருவர்தான் ‘தலைவர் 168’ படத்தில் அவருக்கு ஜோடியாக நடிக்கவிருப்பதாக கூறப்படுகிறது
 
’தர்பார்’ திரைப்படத்தின் புரமோஷன் ஒருபுறம் நடந்து கொண்டிருக்க, ‘தலைவர் 168’ திரைப்படத்தின் ஆரம்ப கட்ட பணிகள் இன்னொரு புறம் நடைபெற்று வருகிறது. இந்த நிலையில் இந்த படத்தில் ரஜினிக்கு மகளாக கீர்த்திசுரேஷ் நடிக்கவிருப்பது கிட்டத்தட்ட உறுதியாகிவிட்ட நிலையில் ரஜினிக்கு ஜோடியாக நடிக்க மூன்று நடிகைகளிடம் பேச்சுவார்த்தை நடந்து வருகிறதாம்
 
குஷ்பு, சிம்ரன் மற்றும் மீனா ஆகிய மூவரிடமும் இயக்குனர் சிறுத்தை சிவா தரப்பில் இருந்து பேச்சுவார்த்தை நடத்தி வருவதாகவும், இவர்களில் ஒருவர்தான் ‘தலைவர் 168’ படத்தின் நாயகி என்றும் கூறப்படுகிறது. மூவருமே ரஜினிக்கு ஜோடியாக ஏற்கனவே நடித்துள்ள நிலையில் மீண்டும் இணையப்போவது யார்? என்பதுதா தற்போதைய கேள்வியாக உள்ளது
 
‘தலைவர் 168’ படக்குழுவினர்களிடம் இருந்து கசிந்த தகவலின்படி குஷ்பு இந்த படத்தில் நடிக்க அதிக வாய்ப்பு இருப்பதாக கூறப்படுகிறது