செவ்வாய், 24 டிசம்பர் 2024
  1. பொழுதுபோக்கு
  2. சினிமா
  3. சினிமா செய்தி
Written By Sinoj
Last Modified: திங்கள், 17 மே 2021 (22:36 IST)

பிரபல சீரியல் நடிகைக்கு காதலருடன் திருமணம்..ரசிகர்கள் வாழ்த்து

பாண்டியன் ஸ்டோர்ஸ் சீரியலில் நடித்த கவிதா கவுடாவுக்கு திருமணம் நடைபெற்றுள்ளது.

விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பான சீரியல் மகாபாரதம் இதில், சீதாவாக நடித்து மக்களிடம் பிரபலமானவர் கவிதா கவுடா.

இவர் தற்போது பாண்டியன் ஸ்டோர்ஸ் சீரியலில் முன்பு முக்கிய  கேரக்டரில் நடித்திருந்தார்.

இவர் இந்த சீரியலில் நடிக்கும்போது, நடிகர் சந்தன்குமார் என்பவருடம் பழக்கம் ஏற்பட்டு இந்த நட்பு காதலாகியது.

எனவே இவர்களின் இரு வீட்டாரும் பச்சைக் கொடி காட்டவே கடந்த 1 ஆம் தேதி தடபுடலாக திருமணம் நடைபெற்றது. இதுகுறித்த புகைப்படங்கள் தற்போது சமூக வலைதளங்களில் வைரலாகிவருகிறது. இதைப்பார்த்த ரசிகர்கள் கவிதா கவுடாவுக்கு வாழ்த்துகள் கூறி வருகின்றனர்.