செவ்வாய், 24 டிசம்பர் 2024
  1. பொழுதுபோக்கு
  2. சினிமா
  3. சினிமா செய்தி
Written By Sugapriya Prakash
Last Modified: செவ்வாய், 22 டிசம்பர் 2020 (12:42 IST)

அட அதே மாதிரியே இருக்கீங்க... புது முல்லையின் வைரல் போட்டோ!!

முல்லை கதாபாத்திரத்தில் அடுத்த யார் நடிப்பார் என்ற கேள்விக்கு தற்போது பதில் கிடைத்துள்ளது.

 
விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் முன்னணி தொடர்களில் ஒன்று பாண்டியன் ஸ்டோர்ஸ். இந்த தொடரில் முல்லையாக நடித்து வந்த சித்ரா சமீபத்தில் தற்கொலை செய்துக்கொண்டார். இவர் தற்கொலை குறித்த விசாரணைகள் நடந்துக்கொண்டிருக்கிறது. 
 
இந்நிலையில் முல்லை கதாபாத்திரத்தில் அடுத்த யார் நடிப்பார் என்ற கேள்வி இருந்தது. தற்போது இதற்கு பதில் கிடைத்துள்ளது. காவியா அறிவுமணி இனி முல்லையாக நடிப்பார் என்று அந்த தொடரில் நடிக்கும் சக நடிகை அறிவித்துள்ளார். 
 
 மேலும், காவியா முல்லையாக நடித்திருக்கும் எபிசோட் நாளை முதல் ஒளிப்பரப்படும் என எதிர்ப்பார்க்கப்படுகிறது. அதோடு முல்லை போல கெட் அப்பில் காவியா இருக்கும் புகைப்படங்களும் ரசிகர்களை கவர்ந்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.