வெள்ளி, 27 டிசம்பர் 2024
  1. பொழுதுபோக்கு
  2. சினிமா
  3. சினிமா செய்தி
Written By
Last Modified: திங்கள், 28 டிசம்பர் 2020 (18:41 IST)

இந்தியில் ரீமேக் ஆகும் பாண்டியன் ஸ்டோர்ஸ் – இதுதான் முதல் முறை!

விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகி வந்த பாண்டியன் ஸ்டோர்ஸ் தொடர் இப்போது இந்தியில் ரீமேக் செய்யப்பட உள்ளதாக சொல்லப்படுகிறது.

விஜய் தொலைக்காட்சியில் திங்கள் முதல் சனி வரை ஒளிபரப்பாகி வந்த சீரியல் பாண்டியன் ஸ்டோர்ஸ். தமிழ் படமான ஆனந்தத்தை அட்டைக் காப்பி அடித்து உருவாக்கப்பட்ட இந்த சீரியல் ரசிகர்களிடம் ஏகோபித்த ஆதரவைப் பெற்றது. சமீபத்தில் அந்த தொடரின் நாயகி சித்ரா தற்கொலை செய்துகொண்டது மிகப்பெரிய பரபரப்பை ஏற்படுத்தியது.

இந்நிலையில் இப்போது அந்த சீரியல் இந்தியில் ரீமேக் ஆக உள்ளதாக சொல்லப்படுகிறது. இது சம்மந்தமாக வெளியான ஒரு போஸ்டர் அது பாண்டியன் ஸ்டோர்ஸின் ரீமேக் தான் என்பதைக் காட்டுகிறது. ஆனால் இது குறித்தான அதிகாரப்பூர்வ அறிவிப்பு இதுவரை வெளியாகவில்லை.