திங்கள், 23 டிசம்பர் 2024
  1. பொழுதுபோக்கு
  2. சினிமா
  3. சினிமா செய்தி
Written By
Last Modified: வியாழன், 23 ஜூலை 2020 (11:18 IST)

கொரோனா லாக்டவுன் என்னைப் பெரிதாக பாதிக்கவில்லை… ஏனென்றால்? மனம் திறந்த மனிஷா கொய்ராலா!

90 களில் இந்தி மற்றும் தமிழ் சினிமாவில் பிரபல கதாநாயகியாக வலம் வந்தவர் மனிஷா கொய்ராலா.

தமிழில் பம்பாய், இந்தியன் மற்றும் உயிரே போன்ற முக்கியமான படங்களின் மூலம் ரசிகர்களுக்கு அறிமுகமானவர் மனிஷா கொய்ராலா. ஒரு காலத்தில் இவரின் தேதிகளுக்காக பாலிவுட் உலகமே காத்துக் கிடந்தது. ஆனால் மார்க்கெட் இழந்த போது கேன்சர் நோயால் பாதிக்கப்பட்டு அதற்காக சிகிச்சை எடுத்துக் கொண்டு மீண்டு வந்தார். அதன் பின் பாலிவுட் படங்களில் நடிக்க ஆரம்பித்துள்ளார்.

இந்நிலையில் இப்போது கொரோனா கால அனுபவங்களை பகிர்ந்துகொண்டுள்ள அவர் ‘இந்த லாக்டவுன் என்னை பெரிதாக பாதிக்கவில்லை. ஏனென்றால் கேன்சர் சிகிச்சையின் போது ஒரே அறையில் 6 மாதங்களுக்கு மேல் நான் தனிமையில் இருந்தேன். எதிர்மறை எண்ணங்களை தவிர்க்க தியானம் செய்கிறேன். மேலும் நான் என் தோட்டத்தில் உள்ள செடி கொடிகளோடு நேரத்தைக் கழிக்கிறேன். நீண்ட நாட்களுக்குப் பிறகு மும்பையில் இப்போது பறவைகளின் ஒலியைக் கேட்கிறேன். ’ எனக் கூறியுள்ளார்.

கொரோனா லாக்டவுனைப் பயன்படுத்தி மனிஷா கொய்ராலா எழுத்துப் பணிகளிலும் இறங்கியுள்ளதாக சொல்லப்படுகிறது.