செவ்வாய், 24 டிசம்பர் 2024
  1. பொழுதுபோக்கு
  2. சினிமா
  3. சினிமா செய்தி
Written By sinoj
Last Modified: செவ்வாய், 21 ஜூலை 2020 (23:15 IST)

வெளிநாட்டில் சிக்கித் தவித்த 3 ஆயிரம் மாணவர்களுக்கு தனி விமானம் - பிரபல நடிகர் உதவி

கிர்கிஸ்தான் நாட்டிலுள்ள 300 இந்திய மாணவர்கள் இந்தியாவுக்கு திரும்ப முடியாமல் தவித்து வந்த நிலையில் அவர்கள் நாடு திரும்ப நடிகர் சோனு சூட் உதவி செய்துள்ளார்.

கிர்கிஸ்தான் நாட்டில் இந்தியாவைச் சேர்ந்த சுமார் 3000 மருத்துவ மாணவர்கள் சொந்த நாடு திரும்ப முடியாமல் தவித்தபோது, ஜுலை 22 ஆம் தேதி அந்த மாணவர்கள் தனி விமானம் மூலம் நாட்டுக்கு திரும்ப  நடிகர் சோனு உதவி செய்துள்ளார்.

இதுகுறித்து அவர் தனது டுவிட்டர் பக்கத்தில் தனது மெயில் ஐடியை தெரிவித்துள்ள அவர் எதாவது தொடர்புக்கு இதில் மெயில் அனுப்பும்படி பதிவிட்டுள்ளார்.