செவ்வாய், 24 டிசம்பர் 2024
  1. பொழுதுபோக்கு
  2. சினிமா
  3. சினிமா செய்தி
Written By Papiksha Joseph
Last Updated : செவ்வாய், 31 மார்ச் 2020 (16:14 IST)

லொள்ளு சபா போடுங்கப்பா... விஜய் டிவிக்கு கோரிக்கை வைத்த பிரபல கிரிக்கெட் வீரர்!

கொரோனா கட்டுப்படுத்தல் நடவடிக்கையாக நாடு முழுவதும் ஊரடங்கு பிறப்பிக்கப்பட்டுள்ளதால் சினிமா, சீரியல் படப்பிடிப்புகள் முழுவதும் முடங்கியுள்ளன. முக்கியமாக சின்னத்திரை சீரியல்கள் படப்பிடிப்பு முழுவதுமாக நிறுத்தப்பட்டு 10 நாட்களுக்கும் மேல் ஆகிவிட்டது.

தொடர்ந்து படப்பிடிப்புகள் நடைபெறாததால் அடுத்த எபிசோடுக்கு என்ன செய்வது என்று தெரியாமல் குழப்பத்தில் உள்ள டிவி சேனல்கள் தற்போது தங்களது தொலைக்காட்சிகளில் ஒளிபரப்பான பழைய டிவி சீரியல்களை மறு ஒளிபரப்பு செய்ய தொடங்கியுள்ளன. அந்த வகையில் பிக்பாஸ், சக்தி மான் உள்ளிட்ட தொலைக்காட்சி நிகழ்ச்சிகள் மறுஒளிபரப்பு செய்யவுள்ளனர்.

அந்தவகையில் சந்தானத்தின்  லொள்ளு சபா நிகழ்ச்சியை மறுஒளிபரப்பு செய்யச்சொல்லி பலரும் கேட்டு வருகின்றனர்.   பிரசாந்த், ப்ளூ சட்டை மாறன் எல்லாம் இப்போ வந்தவர்கள் தான். ஆனால் அப்போவே வானத்தைப் போல, எம்டன் மகன் படத்தையெல்லாம் அல்டிமேட் ட்ரோல் செய்து  லொள்ளு சபா டீம் பின்னியெடுப்பார்கள். இணைக்கு  90ஸ் கிட்ஸ் இவ்ளோ பெரிய கிரியேட்டர்ஸா  இருக்கிறார்கள் என்றால் இது தான் காரணாம். இந்நிலையில் தற்போது இந்திய கிரிக்கெட் அணியின் வீரரான அஷ்வின் தனது ட்விட்டர் பக்கத்தில் "லொள்ளு சபா" நிகழ்ச்சியை ஒளிபரப்ப சொல்லி விஜய் டிவிக்கு கோரிக்கை வைத்துள்ளார்.