3டி-யில் கலக்க வருது தில்லுக்கு துட்டு 3 – மீண்டும் பேயைக் கலாய்க்கும் சந்தானம் !
சந்தானம் நடிப்பில் உருவான தில்லுக்கு துட்டு படங்களின் வரிசையில் அதன் மூன்றாம் பாகம் 3டியில் உருவாக இருப்பதாக செய்திகள் வெளியாகியுள்ளன.
நடிகர் சந்தானம் நடிப்பில் கடந்த 2016 ஆம் ஆண்டு வெளியான ‘தில்லுக்கு துட்டு‘ படம் ரசிகர்கள் மத்தியில் பெரும் வரவேற்பை பெற்று மெகாஹிட் ஆனது. அதனை தொடர்ந்து இப்படத்தின் இரண்டாவது பாகம் பிப்ரவரி 7 வெளியாகி கலவையான விமர்சனங்களையும் நல்ல வசூலையும் பெற்றது. சந்தானம் ஹீரோவாக நடிக்கத் தொடங்கியதன் பின்னர் அவருக்குக் கைகொடுத்த ஒரு சில படங்களில் தில்லுக்கு துட்டு படமும் ஒன்றாக அமைந்துள்ளது.
இந்நிலையில் இதன் அடுத்த பாகமான 'தில்லுக்கு துட்டு 3'-ஐ 3டியில் எடுக்க நடிகர் சந்தானம் முடிவு எடுத்துள்ளதாகக் கூறப்படுகிறது. சந்தானம் இப்போது யோகி பாபுவுடன் இணைந்து டகால்டி என்ற படத்தில் நடித்து வருகிறார். இந்த படத்தின் தயாரிப்பாளரான சௌத்ரியே தில்லுக்கு துட்டு படத்தையும் தயாரிக்க இருப்பதாகக் கூறப்படுகிறது.
விரைவில் இது குறித்த அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாகும் என தெரிகிறது. காஞ்சனா படத்தின் நான்காம் பாகமும் 3 டியில் தயாராக இருப்பதாக சன்பிக்ஸர்ஸ் நிறுவனம் சமீபத்தில் அறிவித்தது குறிப்பிடத்தக்கது.