சாணிக் காயிதம் படத்தின் டெரர் லுக் போஸ்டரை பகிர்ந்த செல்வராகவன்!
செல்வராகவன் நடிகராக அறிமுகமாகியுள்ள சாணிக்காயிதம் திரைப்படத்தின் மீதான எதிர்பார்ப்பு ரசிகர்களிடம் அதிகமாக உள்ளது.
இயக்குனர் செல்வராகவனும் நடிகை கீர்த்தி சுரேஷும் நடிக்கும் சாணிக்காயிதம் படத்தின் அறிவிப்பு வெளியானது முதலே எதிர்பார்ப்புகளை உருவாக்கியது. படக்குழுவினர் படப்பிடிப்பை தொடங்கி நடத்திக் கொண்டு இருந்தபோது கொரோனா இரண்டாவது அலை வந்து கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டதால் படப்பிடிப்பு ரத்து பின்னர் மீண்டும் தொடங்கி முடிந்துள்ளது.
இப்போது படப்பிடிப்பு முழுவதும் முடிந்துவிட்ட நிலையில் படத்தை நேரடியாக ஓடிடியில் வெளியிட பேச்சுவார்த்தை நடந்து வந்தது. இந்த படத்தில் வன்முறைக் காட்சிகள் அதிகமாக இருப்பதால் ஓடிடி வெளியீட்டுக்கு முயற்சி நடக்கிறது என்று சொல்லப்படுகிறது. இந்நிலையில் இப்போது படத்தின் பின்னணி இசையமைப்புப் பணிகள் நடந்து வரும் நிலையில் பிப்ரவரி மாதம் ஓடிடி தளத்தில் இந்த படம் வெளியாகும் என சொல்லப்படுகிறது.
இந்நிலையில் செல்வராகவன் இப்போது சாணிக்காயிதம் படத்தின் போஸ்டர் ஒன்றை இணையத்தில் பகிர்ந்துள்ளார். கையில் துப்பாக்கியுடன் இருக்கும் அந்த போஸ்டர் இணையத்தில் கவனம் பெற்றுள்ளது.