1. பொழுதுபோக்கு
  2. சினிமா
  3. சினிமா செய்தி
Written By Sinoj
Last Updated : வியாழன், 23 பிப்ரவரி 2023 (15:11 IST)

பிரபல காமெடி நடிகை மரணம்....முதலமைச்சர், சினிமாத்துறையினர் இரங்கல்

subi suresh
மலையாள சினிமாவின் முன்னணி காமெடி நடிகையாக வலம் வந்த சுபி சுரேஷ் மரணமடைந்தார். இதற்கு சினிமாத்துறையினர் மற்றும் ரசிகர்கள் இரங்கல் தெரிவித்து வருகின்றனர்.
 

மலையாள சினிமாவில் முன்னணி காமெடி நடிகையாக வலம் வந்தவர் சுபி சுரேஷ்

இவர், கடந்த 2006 ஆம் ஆண்டு கனக சிம்ஹாசனம் என்ற திரைப்படம் மூலம் அறிமுகமானார்.

அதன்பின்னர், ஹேப்பி ஹஸ்பண்ட்,  எல்சம்மா என்ன ஆண்குட்டி ஆகிய பல திரைப்படங்களில் நடித்து பிரபலமானார்.

இவருக்கு ஏராளமான ரசிகர்கள் உள்ளனர். இந்த நிலையில், சில நாட்களுக்கு முன் உடல் நலக்குறைவால், மருத்துவமனைக்குச் சென்றிருந்தார். அப்போது, அவரைப் பரிசோதித்த மருத்துவர்கள் அவருக்கு கல்லீரல் பாதிப்பு இருப்பதாக கூறினர்.

இதையடுத்து, கொச்சியில் உள்ள தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு, சிகிச்சை பெற்று வந்த அவர்,  நேற்று காலை சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். இவருக்கு வயது 42 ஆகும்.

இவரது மரணத்திற்கு, கேரள முதல்வர் பினராயி விஜயன்,சினிமாத்துறையினர், ரசிகர்கள் உள்ளிட்ட பலரும் இரங்கல் தெரிவித்து வருகின்றனர்.