1. பொழுதுபோக்கு
  2. சினிமா
  3. சினிமா செய்தி
Written By Sinoj
Last Updated : வியாழன், 16 பிப்ரவரி 2023 (16:45 IST)

அரியவகை நோயால் பாதிக்கப்பட்டுள்ள அனுஷ்கா ! ரசிகர்கள் அதிர்ச்சி

தெலுங்கு சினிமாவின் முன்னணி நடிகை அனுஷ்கா. இவர், அருந்தி, விஜய்யுடன் இணைந்து வேட்டைக்காரன், சூர்யாவுடன் சிங்கம், பிரபாஸுடன் இணைந்து பாகுபலி உள்ளிட்ட பல படங்களில் நடித்துள்ளார்.

இவர், சமீபகாலமாக  எந்தப் படங்களிலும் நடிக்கவில்லை. இந்த நிலையில், அவர் தனக்குள்ள அரியவகை   நோய் பற்றித் தெரிவித்துள்ளளார்.

அதில், நான் சிரிக்க ஆரம்பித்தால், அதைக் கட்டுப்படுத்த முடியாமல் தொடர்ந்து 15 முதல் 20 நிமிடங்கள் வரை சிரிப்பேன். இதனால், ஷூட்டிங்கின் போதுகூட, படப்பிடிப்பை நிறுத்தும் சூழல் ஏற்படுகிறது’’என்று தெரிவித்துள்ளார்.

சமீபத்தில், நடிகை சமந்தாவும் அரிய வகை நோயால் பாதிக்கப்பட்டுள்ள நிலையில், இதற்கு சிகிச்சை பெற்று வருவது குறிப்பிடத்தக்கது.