1. பொழுதுபோக்கு
  2. சினிமா
  3. சினிமா செய்தி
Written By Sinoj
Last Updated : வியாழன், 28 ஏப்ரல் 2022 (22:43 IST)

5 ஆண்டுகளுக்கு பின் ரிலீஸாகும் பிரபல நடிகையின் படம் !

SRIDHIVYA
சிவகார்த்திகேயனின் வருத்தப்படாத வாலிபர் சங்கம் படத்தில் கதாநாயகியாக நடித்து ரசிகர்களின் மனதில் ஒரே படத்தில் இடம் பிடித்தவர் நடிகை ஸ்ரீ திவ்யா. அந்த படத்தில் கிராமத்து பெண்ணாக பவ்யமான அழகை வெளிப்படுத்தி நடித்திருந்த அவருக்கு அடுத்தடுத்து வாய்ப்புகள் கிடைக்காமல் போனது. கிடைத்த படங்களும் அவ்வளவாக ஓடவில்லை.

இதையடுத்து இப்போது விக்ரம் பிரபு நடிப்பில் புதுமுக இயக்குனர் கார்த்திக் இயக்கும் டைகர் என்ற படத்தின் மூலம் ரி எண்ட்ரி கொடுக்கவுள்ளதாகக் கூறப்பட்டது.

கடைசியாக இவர்  ஜீவாவுக்கு ஜோடியாக  நடித்த ஜங்கிலி புங்கிலி கதவ திர என்ற படம் 2017 ஆம் ஆண்டு வெளியானது.

இந்நிலையில் 5 ஆண்டுகள் கழித்து ஸ்ரீதிவ்யா நடித்த படம் தியேட்டரில் ரிலீஸாகியுள்ளது. மலையாளத்தில் அவர் நடித்துள்ள  ஜனகனமன என்ற படம் இன்று வெளியாகியுள்ள நிலையில் இப்படம்   நாளை தமிழில் வெளியாகவுள்ளது.
sridhivya

இப்படத்தில் பிரித்விராஜ் ஹீரோவாக நடித்துள்ளார்.  இப்படத்தை ரடிஜோ ஜோஸ் இயக்கியுள்ளார். இப்படம் மூலம் மீண்டும்  ஸ்ரீதிவ்யா  சினிமாவில்  வலம் வருவார் எனக் கூறப்படுகிறது.