1. பொழுதுபோக்கு
  2. சினிமா
  3. சினிமா செய்தி
Written By Mahendran
Last Modified: திங்கள், 18 ஏப்ரல் 2022 (16:38 IST)

மது விளம்பரத்தில் நடிகைகள் நடித்தால் என்ன தவறு? பிரபல நடிகை

payal rajput
மது விளம்பரத்தில் நடிகைகள் நடித்தால் என்ன தவறு? பிரபல நடிகை
கடந்த சில மாதங்களாக நடிகைகள் மது விளம்பரத்தில் நடிப்பது பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ள நிலையில் நடிகைகள் மது விளம்பரத்தில் நடித்தால் என்ன தவறு என நடிகை பாயல் ராஜ்புத் கேள்வி எழுப்பியுள்ளார் 
 
இதுகுறித்து அவர் கூறும்போது நடிகைகள் மதுபான பிராண்டின் விளம்பரத்தில் நடித்தால் பழமைவாதிகள் கடுமையாக விமர்சனம் செய்கின்றனர்
 
ஆனால் இதே காரியத்தை ஒரு நடிகர் செய்தால் யாரும் விமர்சனம் செய்வதில்லை. இதில்கூட ஏன் ஆண்-பெண் ஏன் வேறுபாடு பார்க்க வேண்டும் 
பெண்கள் பொழுதுபோக்கிற்காக மது அருந்துகிறார்கள். அதனால் அவர்கள் அதனை விளம்பரப்படுத்துவது தவறில்லை என்று கூறியுள்ளார் அவரது இந்த கருத்து பரபரப்பை ஏற்படுத்தியது