1. பொழுதுபோக்கு
  2. சினிமா
  3. சினிமா செய்தி
Written By sinoj
Last Modified: திங்கள், 20 ஜூலை 2020 (16:35 IST)

யுடியூப் சேனல் துவங்கும் பிரபல நடிகை ...

பிரபல நடிகையும் சமூக ஆர்வலருமான கஸ்தூரி தான் யுடியூப் சேனல் தொடங்க உள்ளதாக தகவல் வெளியானது.

பிரபல நடிகை கஸ்தூரி சமூக வலைதளங்களில் அதிரடி கருத்துகளின் மூலம் எப்போதும் ஆக்டிவாக இருப்பவர்.  இவர் பல்வேறு நிகழ்ச்சிகளில் சிறப்பு விருந்தினராகக் கலந்துகொண்டிருக்கிறார்.

கடந்த பிக்பாஸ் நிகழ்ச்சியிலும் கலந்து கொண்டு மக்களிடம் மேலும் பிரபலமானார்.

இந்நிலையில் யுடியூப்-ல் தான் ஒரு சேனலைத் தொடங்கவுள்ளதாக அவர் தெரிவித்துள்ளார்.


மூன்று பெயர்களில் ஒன்றைத் தேர்ந்தெடுக்குமாறு அவர் ரசிகர்களிடம் கேட்டுக்கொண்டுள்ளார்.