புதன், 27 நவம்பர் 2024
  1. ப‌ல்சுவை
  2. மரு‌த்துவ‌ம்
  3. இய‌ற்கை வைத்தியம்
Written By Sasikala

திருநீற்றுப்பச்சிலையின் சாறு எதற்கு பயன்படுகிறது தெரியுமா...?

திருநீற்றுப் பச்சிலை இலையை முகர்வதால் தலைவலி, இதய நடுக்கம், தூக்கமின்மை ஆகியவை குணமாகும். இலையை அரைத்து பூச கட்டி இலைச்சாறுடன் சம அளவு தேன் கலந்து சாப்பிட்டால் மார்புவலி, இருமல், வயிற்று வாயு பிரச்னைகள் சரியாகும்.

10 மிலி திருநீற்றுப் பச்சிலை சாறு எடுத்து தேனில் கலந்து சாப்பிட்டு வர மார்பு வலி, மேல் சுவாசம், இருமல், வயிற்று வாயு தீரும். குடலுக்கு பலத்தை  கொடுக்கும்.
 
திருநீற்றுப் பச்சிலையின் இலையை மென்று சாப்பிட்டால் வாய்வேக்காடு சரியாகும். தேள் கடிப்பதால் வலி ஏற்படும்போது அதன் கடிவாயில்  திருநீற்றுப்பச்சிலையை கசக்கி பூசினால் வலி குறையும்.
 
காது வலி, காதில் சீழ் வடிதல் போன்ற பிரச்னைகளுக்கு இலைச்சாறு சில சொட்டுகள் விட்டால் நிவாரணம் கிடைக்கும். முகப்பருவை விரட்ட திருநீற்றுப் பச்சிலை சாறுடன் வசம்பு சேர்த்து அரைத்துப் பூசினால் பலன் கிடைக்கும்.
 
5 கிராம் அளவு திருநீற்றுப் பச்சிலை விதையை 100 மிலி நீரில் போட்டு 3 மணி நேரம் ஊறவைத்து சாப்பிட்டு வயிற்று கடுப்பு, இரத்த கழிச்சல், நீர் எரிச்சல்,  வெட்டை ஆகியவை குணமாகும்.