வியாழன், 23 ஜனவரி 2025
  1. பொழுதுபோக்கு
  2. சினிமா
  3. சினிமா செய்தி
Written By Sasikala
Last Updated : செவ்வாய், 29 ஆகஸ்ட் 2017 (12:37 IST)

சிறைத்துறை அதிகாரியான டி.ஐ.ஜி ரூபாவாக நடிக்கும் நயன்தாரா?

கர்நாடகா சிறைத்துறை அதிகாரியான டி.ஐ.ஜி ரூபாவை மையமாக வைத்து எடுக்கும் படத்தில் நயன்தாராவை நடிக்க வைக்க முயற்சிகள் மேற்கொள்ளப்படுவதாக இயக்குநர் ஏ.எம்.ஆர்.ரமேஷ் தெரிவித்துள்ளார்.

 
பரப்பன அக்ராஹார சிறையில் நடைபெற்ற விதிமீறல்களை அம்பலபடுத்திய டி.ஐ.ஜி.ரூபா அதன்பின் தமிழக மக்களிடையே பிரபலமானார். இந்த புகாரையடுத்து ரூபா பதவி மாற்றம் செய்யப்பட்டார்.  
 
இதுகுறித்து இயக்குநர் ஏ.எம்.ஆர்.ரமேஷ் கூறுகையில், சிறைத்துறையில் நடக்கும் முறைகேடுகளை மையமாக வைத்து படம்  இயக்க இருப்பதாகவும், இதுகுறித்து ரூபாவிடம் பேசி சம்மதம் வாங்கியிருப்பதாகவும் தெரிவித்துள்ளார். டி.ஐ.ஜி.ரூபா கேரக்டரில் நடிகை அனுஷ்கா அல்லது நயன்தாராவை நடிக்க வைக்க முயற்சிகள் மேற்கொண்டிருப்பதாக இயக்குநர் ரமேஷ் கூறியுள்ளார்.