1. பொழுதுபோக்கு
  2. சினிமா
  3. சினிமா செய்தி
Written By Sinoj
Last Modified: திங்கள், 18 ஏப்ரல் 2022 (15:32 IST)

நடிகர் விவேக்கின் திட்டத்தை தொடரும் பிரபல நடிகர்!

தமிழ் சினிமாவில் 30 ஆண்டு காலம் தன் தனித்த சிந்தனையாலும், நடிப்பாலும் சமூக விழிப்புணர்வு வசனங்களாலும் சின்னக் கலைவாணர் என அழைக்கப்பட்டவர் நடிகர் விவேக்.

இவரது முதலாம் ஆண்டு நினைவு நாள்  நேற்று அனுசரிக்கப்பட்டது.

அப்போது, அவர்து உருவப் படத்தை தென்னிந்திய நடிகர் சங்க துணைத்தலைவர்  பூச்சி எஸ் . முருகன், செங்கல்பட்டு எஸ் .பி அரவிந்தன் அவர்களும் திறந்து வைத்தனர்.

அப்போது, நடிகர் விவேக்கின் நண்பரும்  நடிகருமான    செல்முருகன் விவேக்கின் கனவான கிரீன் கலாம் ஒரு கோடி மரங்கள்  நடும் திட்டத்தை தொடரும் வகையில் ஒய்.எம்.சி.ஏ மைதானத்தில் நண்பர்கள் துணையுடன் தொடங்கினார்.
murugan

நடிகர் விவேக் மறைந்தாலும் அவரது கனவுத் திட்டத்தை அவரது நண்பர்களும், ரசிகர்கள் தொடர்ந்து செய்து வருவதற்கு மக்கள் பாராட்டுத் தெரிவித்துள்ளனர்