செவ்வாய், 24 டிசம்பர் 2024
  1. விளையாட்டு
  2. விளையாட்டு
  3. செய்திகள்
Written By Mahendran
Last Modified: வெள்ளி, 3 செப்டம்பர் 2021 (20:35 IST)

உலக அளவில் கோஹ்லிக்கு 4வது இடம்: முதல் மூன்று இடத்தில் யார்?

உலகின் முன்னணி சமூக வலைதளமான இன்ஸ்டாகிராமில் அதிக ஃபாலோயர்கள் வைத்திருக்கும் பட்டியலில் இந்தியாவின் விராட் கோலி 4-வது இடத்தில் உள்ளார் என்ற தகவல் தற்போது வெளிவந்துள்ளது 
 
இந்திய கிரிக்கெட் அணியின் கேப்டன் விராட் கோலி 150 மில்லியன் ஃபாலோயர்களை இன்ஸ்டாகிராமில் பெற்றுள்ளார். இதனை அடுத்து 150 மில்லியன் ஃபாலோயர்களை பெற்ற முதல் ஆசிய நட்சத்திரம் என்ற பெருமையை விராட் கோலி பெற்றுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது 
 
உலக அளவில் இன்ஸ்டாகிராமில் அதிக பாலகர்கள் வைத்திருக்கும் பட்டியலில் முதலிடத்தில் ரொனோல்டா, இரண்டாவது இடத்தில் மெஸ்ஸி மற்றும் மூன்றாவது இடத்தில் நெய்மர் உள்ளனர் 
 
இதனை அடுத்து நான்காவது இடத்தில் அதிக ஃபாலோயர்களை கொண்ட நட்சத்திரமாக விராத் கோஹ்லி உள்ளார் விரைவில் அவர் முதல் இடத்தை பிடிப்பார் என்று எதிர்பார்க்கப்படுகிறது