திங்கள், 27 ஜனவரி 2025
  1. பொழுதுபோக்கு
  2. சினிமா
  3. சினிமா செய்தி
Written By
Last Modified: செவ்வாய், 18 ஆகஸ்ட் 2020 (17:42 IST)

துவங்கியது மணிஹெய்ஸ்ட் ஷூட்டிங் – வைரலான புகைப்படங்கள்!

ஸ்பானிஷ் இணையத் தொடரான மணி ஹெய்ஸ்ட் தனது ஐந்தாவது பாகத்துக்கான படப்பிடிப்பை தொடங்கியுள்ளது.

நெட்பிளிக்ஸ் வெளியிட்ட மணி ஹெய்ஸ்ட் தொடரின் நான்கு சீசன்களும் இளைஞர்களை வெகுவாக கவர்ந்துள்ளது. ஆரம்பத்தில் டெலிவிஷன் தொடராக எடுக்கப்பட்ட இது பெரும் வரவேற்பு கிடைக்காததால் நெட்பிளிக்ஸுக்கு விற்கப்பட்டது. ஸ்பானிஷ் தொடரான இது அந்த நாட்டில் பிரபலமாகாவிட்டாலும், உலக அளவில் பலரது பாராட்டுகளை பெற்றதால் அடுத்தடுத்த சீசன்கள் வெளியாகின.

இதுவரை நான்கு சீசன்கள் வெளியாகியுள்ள இந்த தொடரின் ஐந்தாவது சீசனுககான படப்பிடிப்பு இப்போது தொடங்கியுள்ளது. இது சம்மந்தமான ஷூட்டிங் ஸ்பாட் புகைப்படங்கள் இப்போது இணையத்தில் வைரலாகி வருகின்றன.